Just In

பரபரக்கும் 'சூரரை போற்று' படத்தின் ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு தகவல்! காரணம் என்ன, ஒருவேளை தியேட்டர்களில் திரையிடப்படுமோ?

எப்போது தான் திரையங்குகள் திறக்கப்படுமோ என சினிமா ரசிகர்கள் ஏங்கிக்கிடக்க, அடுத்தடுத்தான புது படங்களின் டீசர்கள் வெளிவரும் வண்ணம் உள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்திலேயே அதிக எதிர்பார்ப்பை தூண்டிய ’சூரரை போற்று' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியிடப்படும் எனும் தகவல் வந்தது. சில இடர்பாடுகள் காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கபடவுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டு முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதிக்கு ஒன்பது நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக புரமோஷன்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இதிலிருந்தே 'சூரரை போற்று'படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தற்போது, அந்த சந்தேகம் கிட்டத்தட்ட உறுதியே செய்யப்பட்டிருக்கிறது. 

பொதுவாக, படம் வெளியாவதற்கு 5 நாட்களுக்கு முன்பே படத்தின் கிளியரன்ஸ் அனைத்தும் வரவேண்டும் என்றும், ஆனால் தற்போது வரை கிளியரன்ஸ் வராததால் இந்த படத்தின் ரிலீசை ஒத்திவைக்க அமேசான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துவந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறயிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒருவேளை நேரடியாகவே  திரையரங்குகளில் ’சூரரை போற்று திரையிடப்படுமா? அல்லது வேறு தேதியில் ஓடிடியில் வெளியாகுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700