Just In

கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும்

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளது. இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஜான் எட்மண்ட் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலகளவில்  கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளது.  இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஜான் எட்மண்ட் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இங்கிலாந்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.70 லட்சத்தினை தாண்டியது. 2ஆவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதால் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் இங்கிலாந்து அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதனிடையே இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஜான் எட்மண்ட்  கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

தற்போதைய சூழலில் தொற்று பாதிப்பு வாய்ப்புகள் குறைக்கப்பட வேண்டும் அப்போதுதான் தடுப்பூசியை பரவலாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.வெவ்வேறு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் முதலீடு செய்வதில் பிரித்தானியா புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைத்தால் எல்லோருக்கும் உடனடியாக அது சென்று சேரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆறு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளுக்கான விநியோக ஒப்பந்தங்களில் இங்கிலாந்து கையெழுத்திட்டுள்ளது, நாடு முழுவதும் 44,000க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700