Just In

விஷாலின் ஆக்ஷன் படத்தால் எனக்கு 8 கோடிக்கு மேல் நஷ்டம்: தயாரிப்பாளர் ரவீந்திரன்! 'சக்ரா' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை!

பிக் பாஸ் பிரபலங்களை பற்றி பேசியதால் அதிக பிரபலமடைந்தவர் தயாரிப்பாளர் ரவீந்திரன். வனிதா விவகாரத்தால் இன்னும் அதிகமாக மக்களால் பேசப்பட்டார் இவர். இந்நிலையில், இவர் விஷாலால் தனக்கு 8 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், குறிப்பிட்ட தொகைக்கான உத்திரவாதத்தை விஷால் கொடுத்த பிறகே 'சக்ரா' படத்தை திரையிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதை தடை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ரவீந்திரன் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த வழக்கில் விஷால் நடித்த ’ஆக்சன்’ படத்தால் தனக்கு 8 கோடிக்கும் மேல் நஷ்டம் என்றும், அந்த பணத்தை திருப்பித்தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும், ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அந்த பணத்தை விஷால் தனக்கு செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.


இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு விஷால் ரூ.4 கோடி தர வேண்டும் என உத்தரவு வந்திருக்கிறது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஷால் திட்டமிட்டுள்ளதாக பேச்சுகள் வந்தவண்ணம் இருந்தன.  


இந்த நிலையில் தான் ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி விஷால் நடித்த ’சக்ரா’ படத்தை வெளியிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விஷாலின் 'சக்ரா' படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை விதிக்கக்கோரி தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700