லைப் ஸ்டைல்

ஜிம்மிற்கு போக சோம்பேறித்தனம், ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டுமே! இதோ இருக்கிறது வழிமுறைகள்...

உடல் பருமனை குறைக்க காலை உடற்பயிற்சி மிகவும் அவசியம். அவ்வாறு காலை நேரத்தில் உங்களால் ஜிமிற்கு போக முடியவில்லை என்றால் இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாமே...

நாளை முதல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது ஜிமிற்கு போகிறேன் என பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனால் சோம்பேறித்தனத்தால் ஜிமிற்கு செல்வதை அடுத்தநாளுக்கு ஒத்திவைப்பர். இது நீண்டு கொண்டே போகும். உடல் பருமனை குறைக்க காலை உடற்பயிற்சி மிகவும் அவசியம். அவ்வாறு காலை நேரத்தில் உங்களால் ஜிமிற்கு போக முடியவில்லை என்றால் இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

சரியான நேரத்தில் தூங்குவது : எப்போதும் நாம் இரவு தூங்குவதற்கு முன்பு ஸ்மார்ட் போன்களில் சமூக ஊடகங்களை பார்ப்பது வழக்கம். இதனால் இரவு நேர தூக்கம் மாறிவிடுகிறது. இதனால் காலை உங்களால் சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியாது. இனி போன்களை பார்ப்பதை விட்டுவிட்டு இரவில் சரியான நேரத்திற்கு தூங்குங்கள். உங்கள் எட்டு மணிநேர தூக்கத்தை நீங்கள் சரியாக முடிக்கும் போது, அடுத்த நாள் நீங்கள் சோர்வாகவோ, சோம்பலாகவோ அல்லது அமைதியற்றவராகவோ உணர மாட்டீர்கள்.


அருகிலுள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தைக் கண்டுபிடியுங்கள்: நீண்ட தூரம் பயணம் தான். நாம் வெளியே போகும் பல திட்டத்தை தோல்வியுறச் செய்கிறது. ஜிம்மிலும் இதே நிலைதான். உங்கள் உடற்பயிற்சி கூடம் அருகில் இருந்தால், அதை உங்கள் வழக்கமான வேலையுடன் நிர்வகிக்க மிகவும் எளிதாக இருக்கும். உங்கள் ஜிம் அருகில் இருந்தால் சிறிது நேரத்தையும் மிச்சப்படுத்துவீர்கள்.

ஜிம் நண்பரைக் கண்டுபிடியுங்கள் : உங்களுக்கு தனியாக ஜிம் செல்ல சோம்பேறித்தனமாக இருந்தால், ஜிம் செல்லும் ஒரு நண்பரை கண்டுபிடியுங்கள். அல்லது ஜிம்மில் உள்ள ஒரு நபரை நண்பராக்கிக் கொள்ளுங்கள். இதனால், தினமும் நீங்கள் ஜிமிற்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் : நீங்கள் ஒரே இரவில் எடை அதிகரிக்கவில்லை, எனவே ஒரே இரவில் அதை இழக்க முடியாது. வாழ்க்கையில் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நேரம் எடுக்கும். எடை இழப்பு முடிவுகளைக் காண நீங்கள் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் எந்தவொரு முடிவிற்கும் தாவுவது நல்லதல்ல.


மனஉறுதியுடன் இருக்க வேண்டும்: நீங்கள் சோர்வாக இருக்கும் நாட்களில் சோம்பேறித்தனம் உருவாகும். ஆனால் நீங்கள் உடல் எடையை குறைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டு உங்கள் மனதை உறுதியாக்குவதன் மூலம் அந்த சோம்பலைக் நீக்கலாம்.


திட்டமிடல் அவசியம்: நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் உடல் எடையை குறைப்பது கடினம்.

அதிகாலையில் செல்லுங்கள்: உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன்பு அதிகாலையில் எழுந்து ஜிம்மிற்கு செல்வதன் மூலம், மிகவும் சுறுசுறுப்பாக உணரலாம். உடற்பயிற்சி செய்வது உற்சாகமளிக்கும். இது ஒரு சிறந்த காலை வழக்கமாக மாறும். ஆனால் நீங்கள் காத்திருந்தால், ஜிம்மிற்கு செல்ல மிகவும் சோர்வாக உணரலாம். படுக்கையில் இருந்து வெளியேறுவது முதல் காலை நேரம் கடினமாக இருக்கலாம். அதுவே காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டால் அந்த நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

உங்கள் வழிமுறையை மாற்றுங்கள்: ஒரே பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்வது சலிப்பானதாக மாறும். சலிப்பைத் தவிர்க்க, புதிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்லலாம். எடுத்துக்காட்டாக, ஒரு தட்டையான பெஞ்சிற்கு பதிலாக ஒரு சாய்ந்த பெஞ்ச் பிரஸ் பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு, விஷயங்களை மாற்றுவதன் மூலம், உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் செயல்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.


வாக்குறுதி அளிக்க வேண்டாம்: வாழ்க்கையில் நீங்கள் விரும்புவதை  அடைய  குறிக்கோள்கள் முக்கியம். ஆனால் உடற்பயிற்சியில் வாக்குறுதிகள் வேண்டாம். அதாவது 3 மாதத்திற்குள் குறிப்பிட்ட எடையை குறைத்து விடுவேன் என வாக்குறுதி செய்து கொள்வதால், அதை செய்ய முடியாத பட்சத்தில் ஏமாற்றமடைவீர்கள்.

ஒரு பயிற்சியாளரை அணுகவும் : ஒரு நிபுணர் உங்கள் இலக்குகளின் அடிப்படையில் உடற்பயிற்சி அளிப்பார்கள். உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது  மற்றும் ஊட்டச்சத்து குறித்த உதவிக்குறிப்புகளை வழங்குவார்கள். நீண்ட கால அனுபவம் ஏற்பட்டால் அவர்களின் உதவி உங்களுக்குத் தேவையில்லை. ஆனால் புதிதாக ஆரம்பிக்கும்போது பயிற்சியாளரிடம் யோசனை கேட்பது மிகவும் அவசியம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate