லைப் ஸ்டைல்

ஊரடங்கு நாட்களினால் கண் பார்வை கோளாரா?

இந்த ஊரடங்கில் இதுவரை 30% வீடியோ கேம் சார்ந்த பொருட்கள் விற்பனை ஆகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 70% அதிகம் என கூறப்படுகிறது. குழந்தைகள் வழக்கமாக விளையாடும் நேரத்தை விட இந்த ஊரடங்கு நாட்களில் கூடுதலாக 5 மணி நேரத்தை செலவிடுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்

இன்னும் ஊரடங்கு ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது இந்த அறிவிப்பு நமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இப்படி நீட்டித்து நீட்டித்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் முடிந்துவிட்டன. ஒரு பக்கம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக  உயர்ந்து கொண்டே இருந்தாலும், கண் பார்வை கோளாறு காரணமாக அதிக அளவில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைவரும் வீட்டிற்குள்லேயே முடங்கியுள்ளனர். பெரியவர்கள் தொலைக்காட்சிகளிலும், செல்போன்களிலும் பொழுதை கழித்தாலும், சிறுவர்கள் வீடியோ கேம்களில் தங்களது பொழுதை கழித்துக்கொண்டிருக்கின்றனர்.   இதனால் ஒரு புறம் அவர்களுக்கு பொழுது கழிந்தாலும், வீடியோ கேம்களால் பலருக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக  தரவுகள் தெரிவிக்கின்றன . 

மயோபியா என்னும் இந்த  கண் பார்வை கோளாறால் உலக அளவில் 30% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2050ற்குள் இது 50% எட்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 

இந்த ஊரடங்கில் இதுவரை 30% வீடியோ கேம் சார்ந்த பொருட்கள் விற்பனை ஆகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 70% அதிகம் என கூறப்படுகிறது. குழந்தைகள் வழக்கமாக விளையாடும் நேரத்தை விட இந்த ஊரடங்கு நாட்களில் கூடுதலாக 5 மணி நேரத்தை செலவிடுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுக்குறித்தது மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், குழந்தைகள் டிவி அல்லது கம்ப்யூட்டரில் விளையாடும் போதும் 20 அடி  தூரம் தள்ளி உட்காரவேண்டும் என தெரிவித்து உள்ளனர். மேலும் குழந்தைகள் விளையாட்டை  கூர்ந்து கவனிப்பதால்  அவர்கள் கண்ணை சிமிட்ட மறுக்கிறார்கள், அதனால் தான் கண்களின்  ஈரப்பதத்தை இழந்துவிட்டு  இந்த வகை நோய்க்கு ஆளாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். என்ன தான் நோய் தொற்று பயம் இருந்தாலும், குழந்தைகளை ஒரு நாளைக்கு 20 நிமிடமாவது திறந்த வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும்  கூறுகின்றனர்.
 
எனவே பெற்றோர்கள் இது போன்ற கண் கோளாறுகளில் இருந்து தங்களின் பிள்ளைகளை  காத்து, நோயற்ற வாழ்விற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate