ஆன்மிகம்

கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 'நவம்பர் 2' அன்று அனுசரிக்கும் கல்லறை திருநாள் ரத்து!

கொரோனா தொற்றின் காரணமாக கல்லறை திருநாளாகிய நவம்பர் 2-ந்தேதி அன்று பொதுமக்கள் யாரும் கல்லறைத் தோட்டங்களுக்கு வரவேண்டாம் என சென்னை கல்லறைகள் அமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் மாதத்தின் மற்ற நாட்களில் மக்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி இறந்தவர்களை நினைவுக்கூரும் விதமாக  கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனை, கல்லறை திருநாள் எனவும் ஆத்துமாக்கள் தினமென்றும் அழைக்கிறார்கள் கிறிஸ்தவர்கள். 


இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் கல்லறை திருநாளை இந்த ஆண்டு நடைப்பெறாதவாறு தவிர்க்கும்படி சென்னை கல்லறைகள் அமைப்பு அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம் மற்றும் தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் ஆலோசனைப்படி, இந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதியன்று கீழ்ப்பாக்கம், காசிமேடு ஆகிய கல்லறை தோட்டங்களை பூட்டிவைப்பது என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாகவும், சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிவுரைகளின் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் அன்று கல்லறைத் தோட்டங்களுக்கு வரவேண்டாம். நவம்பர் மாதத்தின் மற்ற நாட்களில் மக்கள் வந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம்' என்று கூறப்பட்டிருக்கிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate