லைப் ஸ்டைல்

நாளொன்றுக்கு ஒரு கொய்யா, அலறியடித்து ஓடும் புற்றுநோய்!

அதிக அளவிலான நார்ச்சத்து கொண்டுள்ள கொய்யா பழத்தை உணவோடு அதிகம் சேர்த்து கொள்ளுமாறு கூறுகின்றனர் பெரியவர்கள். கொய்யா பழம் சாப்பிடுவதால் அப்படி என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாமே...

கொய்யா பழம் தன்னகத்தே ஏராளமான நன்மைகள் நிறைத்துள்ளது. அதில், அதிக அளவிலான வைட்டமின்-சி, நார்ச்சத்துக்கள், இரும்பு சத்து, வைட்டமின்-ஏ, மெக்னீசியம், வைட்டமின் பி-6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் தான் கொய்யா பழத்தை உணவோடு அதிகம் சேர்த்து கொள்ளுமாறு கூறுகின்றனர் பெரியவர்கள். 

ஆரோக்கியமான செரிமானம்:
கொய்யா பழத்தினை அதிக அளவு உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்:
கொய்யா பழத்தில் சிறந்த அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் ரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து சீராக வைக்கும்.

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்:
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை உண்டு வரும்போது ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கொய்யா பழம் உண்டு வந்தால் அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு சீரடையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

புற்று நோய் வராமல் காக்கும்:
கொய்யா பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது. தினமும் ஒரு கொய்யா பழத்தினை உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என பல்வேறு ஆய்வுகள் சான்று பகிர்கின்றன.


ரத்த சோகையை போக்கும்:
கொய்யா பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொள்ளும்போது ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் காக்கும். மேலும் உடலில் ரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்.

உடல் எடையை குறைக்கும்:
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் கிட்டத்தட்ட 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில் கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate