Just In

தன் உடல்நலம் குறித்த வதந்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த கவுண்டமணி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

சமூக வலைத்தள பக்கங்கள் வந்ததிலிருந்து நல்ல செய்திகள் வேகமாக பரவுகிறதோ இல்லையோ கேட்ட செய்திகள் காட்டு தீயாக பரவிவிடுகின்றன. அந்த வகையில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்தான செய்தி வேகமாக பரவியது. ஏற்கனவே ஓரிரு முறையாவது அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியாகியிருப்பதால் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என்று கவுண்டமணி தரப்பிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

காமெடி நடிகர் கவுண்டமணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் வதந்தி பரவியது. இது ரசிகர்களை மட்டுமில்லாது திரையுலகத்தினரையும் பரபரப்படைய செய்தது. இதனால் கவுண்டமணி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அது உண்மை அல்ல என்றும் அவர் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. மேலும், அவர் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் அந்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது. 


கவுண்டமணி குறித்த வதந்திகள் வெளியாவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஓரிரு முறையாவது அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியாகியிருப்பதால்  இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என்று கவுண்டமணி தரப்பிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்க தற்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இதனையடுத்து தன்னுடைய வழக்கறிஞர் மூலம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர் கவுண்டமணி. ஒருசில இணையதளங்கள் தன்னுடைய உடல் நிலை குறித்து அவதூறு பரப்புவதாகவும், தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கவுண்டமணி குறித்த வதந்தி பரப்பியவர்கள் மீது விரைவில்  கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுக்கும் என்று அவர் தரப்பினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700