Just In

சூப்பர் அப்டேட், கார்த்தியின் 'சுல்தான்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதாம்!

கடந்த வருடத்தை போல இந்த ஆண்டும் கார்த்தியின் சுல்தான் படமும் விஜய்யின் மாஸ்டர் படமும் பொங்கலுக்கு மோதவுள்ளன. இந்நிலையில், முதல் கட்டமாக ‘சுல்தான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரவிருக்கும் தினத்தை அறிவித்திருக்கின்றனர் படக்குழுவினர். ‘சுல்தான்’ படத்தின் இந்த சூப்பர் அப்டேட் கார்த்தியின் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகிவரும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.  இந்த படத்திற்கான தனது பகுதியின் டப்பிங் பணிகளை தொடங்கியிருந்ததை வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்  கார்த்தி. இவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கியவரும் பாக்யராஜ் கண்ணன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ளன. முதல் கட்டமாக ‘சுல்தான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘சுல்தான்’ படத்தின் இந்த சூப்பர் அப்டேட் காரணமாக கார்த்தி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே தினத்தில்தான் விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ‘சம்பவம்’ ஆகிய திரைப்படங்களும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போல கார்த்தியின் கைதி படமும் விஜய்யின் பிகில் படமும் ஒன்றாக திரைக்கு போட்டியிட வந்தது குறிப்பிடத்தக்கது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700