உலகம்

அமெரிக்க மக்களின் உயிரை டிரம்ப் துச்சமாக மதிக்கிறார் - ஜோ பைடன் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க மக்களின் உயிரை டிரம்ப் துச்சமாக மதிக்கிறார் என்று ஜோ பைடன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:-

நவம்பர் 3-ஆம்  தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தேர்தல் நெருங்க நெருங்க பிரச்சாரத்தின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரசாரத்தில் ஜோ பைடன், "கொரோனாவுடன் வாழ அமெரிக்கர்கள் பழகிவிட்டனர். கிட்டத்தட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கர்கள், கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். டிரம்பின் நிர்வாக திறமையின்மை மற்றும் உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு நிர்வாகிகள் ஆகியோரது அலட்சியத்தின் காரணமாக கொரோனா மென்மேலும் பரவி வருகிறது. 

கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என கூறுவதைக் காட்டிலும் கொரோனாவுக்கு பலியாகப் பழகிக்கொள்ளுங்கள் என டிரம்ப் கூறுவது பொருத்தமாக இருக்கும். மக்களின் உயிரை இவ்வாறாக டிரம்ப் துச்சமாக மதிக்கிறார்" என்று  காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700