உலகம்

காற்றின் தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது...இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாய்ச்சல்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரசாரமாக பேசினர். அப்போது காற்று மாசுபாடு குறித்து பேசிய டிரம்ப், இந்தியா மீது குற்றம்சாட்டினார். சீனா, ரஷியாவைப் போன்று இந்தியாவிலும் காற்று மாசடைந்துள்ளது என்றார் டிரம்ப்.

அமெரிக்காவில் குறைந்த அளவில் கார்பன் வெளியேற்றப்படுவதாகவும், இந்தியாவும், ரஷியாவும் பருவநிலை மாற்ற பிரச்சினையில் முதலில் உள்ள நாடுகள் எனவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லி அலிப்பூர் பகுதியில் காற்று தரக் குறியீடு 400-ஐ கடந்துள்ள நிலையில், டிரம்ப் இவ்வாறு குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்து டிரம்ப் விமர்சிப்பது இது முதல் முறையல்ல. இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் காற்றின் தரத்தை கவனிப்பதில்லை என்று டிரம்ப் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். பாரிஸ் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமான, ஆற்றலை வீணடிக்கும் ஒப்பந்தம் என்று விமர்சித்த அவர், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாகவும் கூறினார்.

விவாதத்தின் நடுவரான க்ரிஸ்டன் வெல்கர் டிரம்பிடம் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு கையாளுவீர்கள் அதே சமயத்தில் வேலை வாய்ப்புகளை எவ்வாறு பெருக்குவீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த டிரம்ப், "கடந்த 35 வருடங்களில் அமெரிக்கா வெளியிடும் கார்பன் எண்ணிக்கை சரியானதாக உள்ளது. சீனாவை பாருங்கள் அவ்வளவு அசுத்தமாக உள்ளது, ரஷ்யாவை பாருங்கள் எவ்வளவு அசுத்தமாக உள்ளது. இந்தியாவை பாருங்கள், அசுத்தமாக உள்ளது; அதன் காற்று அசுத்தமாக உள்ளது" என்றார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee