தமிழ்நாடு

அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்....அடுத்தகட்ட கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!!

வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றுக் கொள்கிறது. வரும் ஜனவரி 1, 2021 முதல் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்களும் இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கமான அலுவலக நேரத்தையே பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றுக் கொள்கிறது. வரும் ஜனவரி 1, 2021 முதல் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700