உலகம்

போலந்து அதிபருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் தற்போது போலந்து அதிபர் அண்ட்ரிஜ் டூடாவும் இணைந்துள்ளார். அதிபர் டூடாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிபர் டூடா மற்றும் அவரது மனைவி அகடா கொர்ஹாசரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

வார்சர்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்/பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு பொதுமக்கள் முதல் உலகநாடுகளின் தலைவர்கள் வரை அனைவரும் இலக்காகி வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் உள்பட பல நாடுகளின் தலைவருக்கும் கொரோனா பரவியுள்ளது.

இந்நிலையில், வைரஸ் பரவிய உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் தற்போது போலந்து அதிபர் அண்ட்ரிஜ் டூடாவும் இணைந்துள்ளார். அதிபர் டூடாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அதிபர் டூடா மற்றும் அவரது மனைவி அகடா கொர்ஹாசரும் தனிமைப்படுத்திக்கொண்டனர். தனிமைப்படுத்திக்கொண்ட போதும் தான் தற்போது நன்றாகவே இருப்பதாகவும், தொடர்ந்து தனது பணிகளை செய்வதாகவும் அதிபர் டூடா தெரிவித்துள்ளார்.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee