சினிமா

பிக்-பாஸ் வீட்டிற்குள் இந்த வார எவிக்சன் யார்? பரபரக்கும் தகவல்

பிக்-பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளை பெறுபவர் வெளியேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ஆஜித் வெளியேறுவார் என்று தகவல்கள் பரவிவருகின்றன. இது ஒருபுறம் இருக்க, சுச்சி லீக்ஸ் சர்ச்சைக்குரிய பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவிருக்கும் தகவல் உறுதியாகியிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வார எவிக்சன் பட்டியலில் ஆஜித், சுரேஷ், அனிதா, பாலாஜி மற்றும் ஆரி இடம்பெற்றிருக்கின்றனர். வழக்கம் போல் இதில் யார் குறைவான வாக்குகளை பெறுகிறாரோ அவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் சற்றுமுன் வந்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி இந்த வாரம் ஆஜித் தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார் என்பது அறிவந்திருக்கிறது. ஆனால் அவரிடம் எவிக்சன் பாஸ் இருப்பதால் அவர் அந்த பாஸை பயன்படுத்தி தன்னை எவிக்சனில் இருந்து காப்பாற்றி கொள்கிறாராம். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எவிக்சன் ஆகவில்லை என்கிறார்கள். 

எவிக்சன் பாஸை ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் ஆஜித் அதனை பயன்படுத்திவிட்டதால் இனி எவிக்சன் பாஸ் செல்லாது. அடுத்த வாரமும் ஆஜித் குறைந்த வாக்குகள் பெற்றால் வெளியேற வேண்டும் நிலை ஏற்படும் என்பதை புரிந்து கொண்டு அவர் இனிமேல் விளையாடுவார் என்று பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, சுச்சி லீக்ஸ் சர்ச்சைக்குரிய பாடகி  சுசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவிருக்கும் தகவல் உறுதியாகியிருக்கிறது.
 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee