சினிமா

'மிஸ் இந்தியா' ஆகும் கீர்த்தி சுரேஷ், கலக்கல் ட்ரைலர் ரிலீஸ்!

கீர்த்தி நடித்துள்ள நரேந்திர நாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'மிஸ் இந்தியா' படத்தின் ட்ரைலர் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 'நடிகையர் திலகம்' படத்தில் தன் நடிப்பால் சாவித்ரியை கண்முன் கொண்டு வந்த கீர்த்தி இந்த படத்திலும் புது முயற்சியை நிச்சயம் காட்டுவாராம்.

கீர்த்தி சுரேஷின் ’மிஸ் இந்தியா’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதும் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதும் ரசிகர்களை குதூகலத்தில் வைத்திருக்கிறது. கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நதியா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நரேந்திர நாத் இயக்கியிருக்கிறார். எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகியுள்ளது. 

இந்நிலையில்,  ’மிஸ் இந்தியா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்.பி.ஏ படித்த ஒரு பெண் பிசினஸ் தொடங்க இருப்பதும் அதற்கு அவரது குடும்பத்தில் இருந்தும் வெளியில் இருந்து கிளம்பும் எதிர்ப்பு அதையும் மீறி அவர் பிசினஸில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதும் தான் இந்த படத்தின் கதை என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

’மிஸ் இந்தியா’ என்பது ஒரு பட்டம் அல்ல அது ஒரு பிராண்ட்’ என்று மிஸ் இந்தியா பட்டம் என்கிறார் கீர்த்தி. 'மிஸ் இந்தியா'வை பிராண்டாக மாற்றி தனது பிசினஸில் எப்படி முன்னேறுகிறார் என்பதை குறிக்கும் வகையிலான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee