சினிமா

'இப்ப ஆங்கர் இல்லமா நீ, பிக்-பாஸ் வீட்டுல ஒரு நபர் அவ்ளோ தான்', அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்!

வார இறுதியில் அர்ச்சனா கமலிடம் நறுக்கென கூட்டு வாங்கியிருப்பது அவரை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்குளாக்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி சுரேஷும் வெளிப்படையாகவே அர்ச்சனா டாமினேட் செய்வதாக குற்றம் சாட்டி சாட்டினார். அர்ச்சனாவை விருமாண்டி படத்தின் கேரக்டருடன் ஒப்பிட்டு கமலும் குறையை சுட்டிக்காட்டியது அவர் முகத்தின் வருத்தத்தை வெளிக்காட்டியது.

பிக்-பாஸ் வீட்டில் கலகலப்பாக அனைவரிடமும் பழகி வந்தாலும் பிரச்சனை என வந்தால் அர்ச்சனா உடனே முன்னின்று நாட்டாமைத்தனம் செய்துவருவதுபார்வையாளர்களை சற்று முகம் சுழிக்கவே செய்கிறது. 

அதுமட்டுமின்றி சுரேஷ் உள்பட ஒரு சிலர் வெளிப்படையாகவே அர்ச்சனா டாமினேட் செய்வதாக குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் கமல் நேற்றைய நிகழ்ச்சியின் போது விருமாண்டி படத்தின் கேரக்டருடன் ஒப்பிட்டு அர்ச்சனாவின் குறையை சுட்டிக்காட்டினார்.

அர்ச்சனா பிக்பாஸ்க்கு வெளியே ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னரும் தொடர்ந்து ஆங்கரின் செய்து வருவதாக கமல் தெரிவித்தார். ஆனால் அதனை வேகமாக மறுத்த அர்ச்சனாவிடம், ’அதை நான் தவறு என்று சொல்லவில்லை என்றும் ஆனால் எல்லா விஷயத்திலும் குறிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் அதில் நீங்கள் டாமினேட் செய்வதுபோல் இருக்கிறது என்றும் அர்ச்சனாவுக்கு லேசாக ஒரு குட்டு வைத்தார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சு அர்ச்சனாவை கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது அவரது முகத்தில் இருந்து தெரிகிறது. இனிவரும் நாட்களிலாவது அர்ச்சனா தனது நாட்டாமைத்தனத்தை கைவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee