சினிமா

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் சிம்புவின் காதலி!

சிம்புவின் 46-வது படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிதி அகர்வால் தற்போது பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட நாயகியான நந்திதா தாஸ் சுசீந்திரனின் படத்தில் சிம்புக்கு தங்கையாக நடித்துவருகிறாராம்.

தெலுங்கு நடிகையான நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட நாயகியான நந்திதா தாஸ் இந்த படத்தில் சிம்புக்கு தங்கையாக நடித்துவருகிறாராம். 

இந்நிலையில், நிதி அகர்வால் மேலும் ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி உள்ளார். மகிழ்திருமேனி இயக்க உள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளாராம். முன்னதாக அனு இமானுவேல் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகியதால் நிதி அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate