உலகம்

பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு - 8 மாணவர்கள் உயிரிழப்பு

கேமரூன் நாட்டில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

யுவண்டே:-

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கும்பா மாகாணம் பியாங்கோ நகரில் சர்வதேச கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான மதர் பிரான்சிஸ்கா சர்வதேச இருமொழி அகாடமி என்ற பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேலையில், துப்பாக்கிகளுடன் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த கோர சம்பவத்தில் மாணவர்கள் 8 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Gunmen storm school in Cameroon, killing at least eight children |  TheTop10News | Breaking world news, photos & videos.

இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேமரூன் நாட்டில் தென்மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்கள் இரண்டும் ஆங்கிலம் பேசும் பகுதிகள் ஆகும். இந்த இரண்டு பிராந்தியங்களும் நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் பெரும்பான்மையினர் இடையே நீண்டகாலமாக பாகுபாடு காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கும்பாவில் நிகழ்ந்துள்ள இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த பகுதியில் ஆங்கிலோஃபோன் என்ற பிரிவினைவாதிகள் குழுவுக்கும்  அரசுப் படைகளுக்கு இடையே கடந்த  மூன்று ஆண்டுகளாக தொடர் மோதலைகள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700