உலகம்

இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தும் மூன்றாவது அரபு நாடானது சூடான்

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலை தனிநாடாக அங்கீகாரித்து, அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தும் மூன்றாவது அரபு நாடாகியுள்ளது சூடான்.

 டெல் அவிவ்:- 

இஸ்ரேலுடான் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தூதரக உறவை ஏற்படுத்த  சூடான் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான சூடான் மத்திய கிழக்கில் நிகழ்ந்து வந்த பல தசாப்த கால விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.


அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்மூலமாக, 1990 களில் அல் கொய்தாவின் அப்போதைய தலைவரான ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்து பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவியதாக அமெரிக்கா விதித்த தடைகளால் சூடான் சர்வதேச அளவில் தனிமை படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் மூலம் சூடான் சர்வதேச தனிமைப்படுத்தலில் இருந்து வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம் தெரிவித்திருப்பதாக வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் டிரம்ப் அறிவித்தாா். மேலும்,  இது ஒரு நம்பமுடியாத ஒப்பந்தமாகும். ஏனெனில், இரத்தக்களரி இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். 


இதுதொடா்பாக தனது ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சூடான் பிரதமா் அப்துல்லா ஹாம்டாக்குடன் டிரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே, இந்த அறிவிப்பை செய்தியாளா்களிடம் அவா் வெளியிட்டாா்.

இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்தியுள்ளது சூடான் வரலாற்றில் மிகுந்த முக்கியமான நாள்களில் ஒன்று என்று அப்போது அவா் கூறினாா். இஸ்ரேலும் சூடானும் நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், அந்த இரு நாடுகளும் பல ஆண்டுகளாகப் பகை பாராட்டி வந்ததாக டிரம்ப் குறிப்பிட்டாா்.

இதற்கிடையே, பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூடான் தலைநகா் காா்ட்டூமில் கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில், இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அந்த சூடானே இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமைதிக்கான புதிய யுகம் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1967ம் ஆண்டு அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பிறகு அரபு லீக் உச்சிமாநாட்டை சூடான் நடத்தியது, அதில் எட்டு அரபு நாடுகள் “மூன்று இல்லை” என்று என்ற முடிவை இஸ்ரேலுக்கு எதிராக எடுத்தன. அவை,  இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை, இஸ்ரேலை ஒரு நாடக அங்கீகரிக்கவில்லை, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளும் இல்லை.

அனால், தற்போது இஸ்ரேலுக்கும் சூடானுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு சாதகமாக மாறிவரும் சூழலை எடுத்துக்காட்டுகிறது.

பாலஸ்தீன பிரச்னை காரணமாக, இஸ்ரேலுக்கும், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளுக்கும் நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது. எகிப்து, ஜோா்டானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்வரை இஸ்ரேலை அங்கீகரிக்கக் கூடாது என்று அரபு லீக் அமைப்பு முடிவு செய்திருந்தது.

எனினும், அமெரிக்காவில் அதிபா் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுவதற்கான முயற்சிகள் தொடங்கின. அதன் பலனாக, இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதாக முதலில் ஐக்கிய அரபு அமீரகமும் அதனைத் தொடா்ந்து பஹ்ரைனும் அறிவித்தன. இந்நாடுகளிடையே, ஏற்பட்ட ஆபிரகாம் அமைதி ஒப்பந்தம் பல தசாப்த கால மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது.

தற்போது 3-ஆவது அரபு நாடாக சூடானும் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்துள்ளது.
இதனிடைய, சூடானின் இந்த முடிவு சூழ்ந்த நாட்டில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள்ள சூடான் அரசின் முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளன.

அதேபோல, சூடானின் இந்த முடிவுக்கு பாலஸ்தீனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள்ள சூடானின் இந்த முடிவு "மிகவும் வெட்கக்கேடானது" என்று பாலஸ்தீனம் விமர்சித்துள்ளது.

Palestinians condemn Sudan-Israel agreement as betrayal of Palestinian cause

யார் விமர்சித்தாலும், யார் எதிர்த்தாலும் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்த பெரும்பாலான நாடுகள் முன்வருகின்றன. இவை எல்லாம் மத ரீதியிலான அரசியலை தாண்டி பொருளாதார மற்றும் பிராந்திய அரசியலின் முக்கியத்துவத்தையும், வர்த்தகத்தின் வலிமையையும் எடுத்து காட்டுகிறது என்பதே உண்மை. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700