Just In

சீனா, பாகிஸ்தானுடனான போரிடும் தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்- உ.பி. பாஜக தலைவர் ஸ்வந்திரா தேவ் சிங்

ராம் கோயில் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது போல, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் போரிடும் தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்' என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக மூத்த தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கூறியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

லக்னோ:-

பாகிஸ்தான், சீனாவுடன் போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநில பாஜக மூத்த தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வதந்திர தேவ் சிங் கூறிய இத்தகைய பேச்சால் இந்தோ-சீன எல்லையில் இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Date of war with China, Pak fixed: UP BJP chief

உத்தரப்பிரதேச மாநில பாஜக மூத்த தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் யாதவ் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

UP BJP chief Swatantra Dev Singh caught on camera showering petals on MLA who supported Ballia firing accused

அதில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நாடு எப்போது போரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறினார்.

ராமர் கோயில் விவகாரத்தில் வெற்றி பெற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370ஐ நீக்கியது ஆகியவற்றைப் போன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எப்போது போர் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று குறிப்பிட்டார். அதாவது, "சம்பந்தித் திதி தை ஹை (தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது)" என்று அவர் ஹிந்தியில் கூறினார்.

மேலும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசினார். 

இந்த கருத்துக்கள் குறித்து உள்ளூர் எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா கேட்டபோது, ​​உத்தரப்பிரதேச பாஜக தலைவர் கட்சி ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதாகக் குறிப்பிட்டார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தோ - சீனா எல்லையில் பதற்றம் நீங்கவே இந்தியா விரும்புவதாகக் கூறினார். அதே நேரத்தில் "ஒரு அங்குல" நிலத்தை கூட யாராலும் பறிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate