இந்தியா

மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார் கபில் தேவ்...!!

மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மருத்துவனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் உடல் நிலை சீராக உள்ளதையடுத்து கபில்தேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை:-

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்முறையாக உலக கோப்பையை (1983-ஆம் ஆண்டு) வென்றுத் தந்த மகத்தான கேப்டன் கபில்தேவ். அவரது அபாரமான பேட்டிங், வேகப்பந்து வீச்சு, பீல்டிங் மற்றும் தனித்துவமான கேப்டன்ஷிப்பால் அந்த உலக மகுடம் கிட்டியது. தலைச்சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்த கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்டில் விளையாடி 5,248 ரன்கள் எடுத்து இருப்பதுடன், 434 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். 225 ஒருநாள் போட்டியில் ஆடி 3,783 ரன்னும், 253 விக்கெட்டும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களும், 400-க்கும் அதிகமான விக்கெட்டுகளும் ஒருசேர எடுத்த ஒரே வீரர் கபில்தேவ் ஆவார்.


‘அரியானா சூறாவளி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 61 வயதான கபில்தேவ் டெல்லியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்டு இருக்கும் அடைப்பை நீக்க ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அவர் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் உடல் நிலை சீராக உள்ளதையடுத்து கபில்தேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில் தேவ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் அதுல் மாத்தூருடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate