சினிமா

'திரெளபதி' இயக்குநரின் அடுத்த படத்தின் தலைப்பு "ருத்ர தாண்டவம்"

'திரெளபதி' இயக்குநர் மோகன்.ஜியின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மோகன்.ஜி, ரிஷி ரிச்சர்ட், ஷீலா கூட்டணியில் வெளியான படம் 'திரெளபதி'. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்திருந்தார். கூட்டு நிதி முயற்சியில் இப்படம் உருவானது. குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம்,மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் விநியோகஸ்தர்கள் அனைவரையும் திருப்திபடுத்தியது . இதனால், மோகன்.ஜியின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இயக்குநர்  மோகன்.ஜி மீண்டும் ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கூறியிருந்தார். கொரோனா ஊரடங்கினால் தள்ளிப்போன இப்படத்தின் அறிவிப்பு நேற்று  (அக்டோபர் 25) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.

'ருத்ர தாண்டவம்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடிக்க உள்ளார். 'திரெளபதி' படத்தை தயாரித்த ஜி.எம் பிலிம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் துவங்கவுள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் 'ருத்ர தாண்டவம்' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஒளிப்பதிவாளராக பரூக், இசையமைப்பாளராக ஜூபின் பணிபுரியவுள்ளனர்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate