சினிமா

சூர்யா - பாண்டிராஜ் இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது

சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'  மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று நல்ல வசூலையும் பெற்றது.

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான பணிகளில் இறங்கினார் பாண்டிராஜ். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என அடுத்தடுத்து குடும்ப பாங்கான படங்களை கொடுத்துவருவதால் பல்வேறு முன்னணி நாயகர்கள் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் 

இதனிடையே, பாண்டிராஜின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கவுள்ளது என்ற செய்தி மட்டும் வெளியானது. இந்நிலையில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது

 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate