விளையாட்டு

ராஜஸ்தானின் வெற்றியால் நடப்பு ஐபிஎல் போட்டியில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது சென்னை அணி...ட்விட்டரில் சாக்க்ஷி தோனி வேதனை!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகள் பெற்றதை அடுத்து 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு நுழையாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை. ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருக்கும் நிலையில், தோனியின் மனைவி சாக்க்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில், ராயல்  சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில்  வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அனால், சென்னை போட்டிக்கு அடுத்து நடைபெற்ற மாற்றொரு ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்க்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில்,  இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிக்கரமான பதிவு ஒன்றை போஸ்ட்  சாக்‌ஷி தோனி பதிவிட்டிருக்கிறார்.  அந்த பதிவில்,  “இது வெறும் விளையாட்டு. சிலவற்றை இழக்கிறார்கள்..சிலவற்றை பெறுகிறார்கள். இதற்கும் முன்பு வெற்றிகளையும், வலிகொடுக்கும் தோல்விகளையும் சந்தித்து இருக்கிறோம். யாரும் தோற்க விரும்பவில்லை. ஆனால் அனைவராலும் வென்றுவிட முடியாது”


”நிஜமான வீரர்கள் போராட பிறக்கிறார்கள். அதனால், அவர்கள் நமது மனதிலும், இதயத்திலும் சூப்பர் கிங்ஸ்தான் எப்போதும்” என்று சாக்க்ஷி குறிப்பிட்டிருக்கிறார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate