சினிமா

’லட்சுமி பாம்’ எனும் மாற்று பெயரில் ஹிந்தியில் தீபாவளிக்கு வெளிவரும் காஞ்சனா திரைப்படம்!

பேய் படங்களுக்கான மவுசுக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில் ராகவா லாரன்ஸின் முனி படம் முதல் காஞ்சனா 3 வரை கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஹிந்தியிலும் இவை தயாராகி வருகின்றனவாம். அந்த வகையில் ஹிந்தியில் அக்சய்குமார், கைரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ’லட்சுமி பாம்’ திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய நான்கு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் தற்போது காஞ்சனா திரைப்படம் ’லட்சுமி பாம்’ என்ற பெயரில் இந்தியில் தயாராகி உள்ளது என்பதும், இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் துஷார் கபூர் பேட்டி ஒன்றில் கூறியபோது ’லட்சுமி பாம்’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, தமிழ் போலவே இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். 

’லட்சுமி பாம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றால் அடுத்தடுத்த பாகங்களில் தயாரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தமிழ் போலவே காஞ்சனா திரைப்படம் ஹிந்தியிலும் அடுத்தடுத்த பாகங்கள் தயாராகுமா என்பது தயாரிப்பாளரை பொறுத்தே இருக்கிறது. 

அக்சய்குமார், கைரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ’லட்சுமி பாம்’ திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate