சினிமா

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி. ஆர்.!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கிறதாம். இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் சிம்புவின் தந்தை டி. ஆர். ராஜேந்திரன். ஓட்டுப்பதிவு நடைப்பெறும் நாளன்று மாலையே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படயுலகில் தயாரிப்பாளர்கள் சங்க  தேர்தல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நவம்பர் 22-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன், ஆர்.கே.சுரேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள். செயலாளர்கள் பதவிக்கு ‘கலைப்புலி’ ஜி.சேகரன், மன்னன், சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

கடந்த 15-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், டி.ராஜேந்தர், முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுவை வாபஸ் பெற வருகிற 29-ந்தேதி கடைசி நாள் என்றும் ஓட்டுப்பதிவு நவம்பர் 22-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும்  அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate