சினிமா

கையில் பாம்புடன் 'ஈஸ்வரனாக' அவதாரம் எடுத்துள்ள சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்துக்கு 'ஈஸ்வரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்துக்கு 'ஈஸ்வரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ மற்றும் சுசீந்திரன் இயக்க வரும் திரைப்படம் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. 'மாநாடு' படத்துக்கு முன்பாக குறுகியகாலத் தயாரிப்பாக சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார் சிம்பு.இப்படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. 'ஈஸ்வரன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா, மனோஜ், நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

கையில் பாம்புடன் முழுக்க உடல் எடையைக் குறைத்திருக்கும் சிம்புவின் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சுமார் 50% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டு, 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிம்பு

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate