சினிமா

விக்ரமை இயக்கும் ’டிமாண்டி காலனி' பட இயக்குனர், இனிதே ஆரம்பமாகிய 'கோப்ரா' படத்தின் அடுத்தகட்ட பணிகள்!

ஏ. ஆர். ரகுமான் இசையில் நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகிவரும் 'கோப்ரா' படத்தின் அடுத்தகட்ட பணிகள் இனிதே ஆரம்பமாகி இருக்கிறது. இதனால் விக்ரமின் ரசிகர்கள் சந்தோஷ களிப்பில் இருக்கின்றனர்.

’டிமாண்டி காலனி' ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து நடிகர் விக்ரமை வைத்து இயக்கி வரும் படம் 'கோப்ரா'. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

12 வித்தியாசமான வேடங்களில் நடித்த்துவரும் நடிகர் விக்ரமின் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட பணி தொடங்கியுள்ளதாம். இந்த படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை அடுத்து, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாம். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate