உலகம்

ரஷ்யா வெறுப்பை ஊக்குவிக்கும் செயல்: ஜோ பைடன் கருத்துக்கு ரஷ்யா பதிலடி

ரஷ்யா தொடர்பாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது வேண்டுமென்றே வெறுப்பை ஊக்குவிக்கும் செயல் என்று ரஷ்யா கூறியுள்ளது.

மாஸ்கோ:- 

ரஷ்யா வெறுப்பை ஊக்குவிக்க இது ஒரு முயற்சி என்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கூறிய கருத்துக்குரஸ்யாவின் கிரெம்ளின் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திற்கு  ஜோ பைடன் அளித்த பேட்டியில்:- 


அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றால் அது ரஷ்யா தான். ஏனெனில் ரஷ்யா நமது பாதுகாப்பையும் நமது கூட்டணிகளையும் உடைப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது." அதேசமயம், சீனாவை அமெரிக்காவின் மிகப்பெரிய போட்டியாளர் என்று தான் நான் கருதுகிறேன். எனினும் நாம் இதை எவ்வாறு கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து, போட்டியாளர்களா இல்லையா என்பதை தீர்மானிப்போம் என்று கூறியிருந்தார்.

இதனிடையே ரஷ்ய அச்சுறுத்தல் குறித்த ஜோ பைடனின் கருத்தை ரஷ்யா நிராகரித்துள்ளது. 

பைடனின், கருத்து தொடர்பாக ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், 


BBC News Channel - HARDtalk, Dmitry Peskov

பைடனின் இந்த "அச்சுறுத்தல்" கூற்று உண்மையல்ல, இது ரஷ்யா மீதான வெறுப்பை ஊக்குவிக்கும் முயற்சி. இவ்வாறு பைடன் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும், ரஷ்யாவை அமெரிக்காவின் எதிரியாக சித்தரிக்கப்படுவது குறித்து  நாங்கள் வருத்தப்பட மட்டுமே முடியும் என்றும் பெஸ்கோவ் கூறினார்.

இதனிடையே, பைடனின் தெரிவித்த இந்த கருத்துக்களை அமெரிக்கா இணையதளவாசிகளே கிண்டல் செய்து வருகிறார்கள். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிகழ்ந்து வரும் மோதல் உலகம் அறிந்ததே. ஆனால் பைடனோ சீனாவை வெறும் போட்டியாளர் என்றே கூறியுள்ளார். 

முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பைடன் சீனாவின் ஆதரவாளர் என்றும், அவர் வெற்றி பெற்றால் அமெரிக்கா சீனாவின் கட்டுப்பாட்டில் சென்று விடும் என்று கூறியிருந்தார். மேலும், பைடன் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே கமலா ஹாரிஸ் அதிபராகி விடுவார், அவர் கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களும், பாலியல் குற்றவாளிகளுக்கு அமெரிக்காவின் எல்லைகளை திறந்து விடுவார் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate