உலகம்

நமீபிய கடற்கரையில் கொத்துக் கொத்தாக இறந்து கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான சீல்கள்

நமீபியா கடற்கரையில் ஆங்காங்கே 7,000 சீல்கள் இறந்து கரையொதுங்கியுள்ள சம்பவம் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மற்றும் கடலியல் ஆய்வாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வின்ட்ஹோக்:-

ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் உள்ள கடற்கரையில் ஆங்காங்கே 7,000 கேப் ஃபர் சீல்கள் (Cape Fur Seals) கொத்துக் கொத்தாக இறந்து கரையொதுங்கியுன்னன. 
வெல்விஸ் வளைகுடா நகரின் அருகே பெலிகன் பாயின்ட் கடற்கரைகளில் செப்டம்பர் மாதம் சில சீல்கள் இறந்து கிடந்தது முதலில் கண்டறியப்பட்டது. 

Thousands Of Seals Found Dead In Namibia

அதன்பின்னர் அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அதிக அளவில் சீல்கள் இறந்துள்ளன. சுமார் 7000 சீல்கள் வரை இறந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சீல்கள் கொத்துக் கொத்தாக இறப்பது விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து ஓசியன் கன்சர்வேசன் அமைப்பினர் நடத்திய ஆய்வில் சீல்கள் விரும்பி உண்ணும் மீன்கள் குறிப்பட்ட பகுதியில் இடம்பெயர்வதால் இந்த அவல நிலை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த சீல்களின் சாம்பிள்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சீல்கள் இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை. எனினும், கடல் மாசு, பாக்டீரியா தொற்று அல்லது ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சீல்கள் இறந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து, மீன்கள் மற்றும் கடல் வள அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் அன்னெலி ஹைபேன், கூறுகையில்:-

சீல்கள் உணவு பற்றாக்குறை காரணமாக  இறந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், எனினும் இதுதொடர்பான சோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் தெரியவரும் என்று கூறினார்.

முக்கிய சுற்றுலா நகரமான ஸ்வாக்கோப்மண்டின் வடக்கே1994 ஆம் ஆண்டில் சுமார் 10,000 சீல்கள்  இறந்து கரையொதுங்கின, இதனால் 15,000 சீல் கருக்கள் இறந்தனஇது மிகப்பெரிய  சீல்கள் இறப்பாகும். இது கடலில் மீன் பற்றாக்குறையினாலும், சுமார் 116 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு சீல் இனப்பெருக்க பகுதியான கேப் கிராஸில் பாக்டீரியா தொற்று காரணமாக இறந்து கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate