உலகம்

இங்கிலாந்தில் எண்ணெய் கப்பல் கடத்தல்- இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

ஆங்கில கால்வாய் பகுதியில் நேவ் ஆண்ட்ரோமெடா (Nave Andromeda) என்ற எண்ணெய் கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லண்டன்:-

லைபீரியன்-கொடியுடன்  நேவ் ஆண்ட்ரோமெடா என்ற எண்ணெய் கப்பல் லாகோஸிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அருகே ஆங்கில கால்வாய் பகுதியில் வந்தபோது கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

இது குறித்து உடனடியாக இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம்  ஆங்கில கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்படுகிறது என்ற தகவலை பாதுகாப்பு படைக்கு அளித்தது.

இதையடுத்து, அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு செயலகம் மற்றும் உள்துறை செயலகம் ஆகியவை ராணுவ படைகளை சம்பவ பகுதிக்கு அனுப்ப முடிவு செய்தது.

லைபீரிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த எண்ணெய் கப்பலை நைஜீரிய நாட்டினர் கடத்த முயன்றுள்ளனர் என கூறப்படுகிறது.Seven stowaways arrested as UK special forces end tanker 'security  incident' :: Lloyd's List

ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் கப்பலில் இறங்கி அதிலிருந்தவர்களை பாதுகாக்கவும், கப்பலை மீட்பதற்கான பணிகளில் ஈடுபட தொடங்கினர். கப்பலை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள் பின்னர் 7 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். கப்பலின் ஊழியர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் உள்ளனர் என அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே, பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், இந்த மீட்பு நடவடிக்கை "இருட்டான நேரத்தில், மோசமான வானிலையிலும்" நடத்தப்பட்டது, "நமது துணிச்சலான பணியாளர்களுக்கு நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

"இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்த எங்கள் பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைக்கு இன்று நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று உள்துறை செயலாளர் பிரிதி படேல் ட்வீட் செய்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate