உலகம்

அமெரிக்க நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிப்போம்- சீனா

தைவான் நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களின் மீது பொருளாதார தடை விதிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்:-

தங்கள் நாட்டின் ஒரு பகுதியான தைவான் உடன் அமெரிக்கா எந்தவிதமான உறவுகளும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தைவான் நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என்று சீனா கூறி அதை மீறியும் அமெரிக்கா தனது ஆயுத விற்பனை செய்து வருகிறது அதற்கு பதிலடியாக அமெரிக்க நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன்:-

China imposes sanctions on US companies selling arms to Taiwan

சீனாவின் எதிர்ப்பை மீறி, அமெரிக்க நிறுவனங்களான லாக்ஹீட் மார்டின், போயிங் டிஃபென்ஸ், ஸ்பேஸ் அண்ட்செக்யூரிட்டி மற்றும் ரேதியோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தைவானுக்கு ஆயுத விற்பனை செய்து வருகின்றன.

தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது மற்றும் அதனுடன் "இராணுவ உறவுகள்" வைத்திருப்பதன் மூலம் அமெரிக்கா சீனாவின் நலனுக்கு  அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே சீனா அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை  தொடர்ந்து எடுப்போம். இதன்படி அந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று கூறினார்.

அண்மையில்,  1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate