உலகம்

முகமது நபி , இஸ்லாம் குறித்து பிரான்ஸ் அதிபரின் கருத்து: பிரான்சின் தயாரிப்புகளை புறக்கணிக்க அரபு நாடுகள் முடிவு

முகமது நபி , இஸ்லாம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சின் தயாரிப்புகளை புறக்கணிக்க அரபு நாடுகள் முடிவு. பிரெஞ்சு நிறுவனங்கள், பிரெஞ்சு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூதரக அதிகாரிகளுக்கு பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்.

ரியாத்:-

பிரான்சில் பள்ளி ஆசிரியர் ஒருவர் முகமது நபி தொடர்பான  கேலிச்சித்திரத்தை காட்டியதன் காரணமாக கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

மேக்ரானின் கருத்துக்களால் அரபு நாடுகளில் பிரான்சிற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பிரான்சில் சில இஸ்லாமிய சமூகங்களில் அதிகாரத்தை கையில் எடுக்கப்போவதாக இஸ்லாமிய பிரிவினைவாதம் அச்சுறுத்துவதற்கெதிராக போராட உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளதாகவும், இஸ்லாம் ஒரு மதமாக உலகம் முழுவதும் கடும் சிக்கலிலிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் மேக்ரான்.

அவரது கருத்துக்களும், மீண்டும் பிரான்சில் வெளிப்படையாகவே முகமது நபியின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை கட்டிடங்களின் சுவர்களில் பிரமாண்டமாக ஒளிப்படமாக திரையிட்டதும், சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, பிரெஞ்சு தயாரிப்புகளை அரபு நாடுகளும், துருக்கியும் தங்கள் பல்பொருள் அங்காடிகளில் புறக்கணிக்கவேண்டும் என்ற பிரச்சாரமும் துவக்கப்பட்டுள்ளது.

Middle East calls for boycott of French products after Macron's comments -  world news - Hindustan Times

குவைத், கத்தார் மற்றும் ஜோர்டான் நாடுகளில் உள்ள கடைகளிலிருந்து பிரெஞ்சு தயாரிப்புகள் மூடப்பட்டுள்ளன அல்லது அகற்றப்பட்டுள்ளன. #BoycottFrenchProducts என்னும் ஹேஷ்டேக், குவைத், கத்தார், பாலஸ்தீனம், எகிப்து, அல்ஜீரியா, ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி முதலான நாடுகளில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

அரபு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான சவுதி அரேபியாவில், பிரெஞ்சு சூப்பர்மார்க்கெட் சில்லறை விற்பனையாளரான கேரிஃபோரை புறக்கணிப்பது தொடர்பான ஹேஷ்டேக் ஞாயிற்றுக்கிழமை டிரெண்டானது.குவைத்தில் சில்லறை கூட்டுறவு நிறுவனங்கள் பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளன.

Mask-wearing protesters are seen at a demonstration in Istanbul on Sunday

மேலும், கத்தார் பல்கலைக்கழகம் தன் பங்குக்கு தங்கள் பல்கலைக்கழகத்தில் வழக்கமாக நடக்கும் பிரெஞ்சு கலாச்சார வார நிகழ்ச்சியை காலவரையறையின்றி தள்ளிவைத்துள்ளது.

பல மத்திய கிழக்கு நாடுகள் பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுப்பதாக பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது, குறிப்பாக உணவு தொடர்பானது என கூறி உள்ளார்.

மேலும், சவூதி அரேபியாவை தலைமையிடமாகக் கொண்ட 57 நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, "நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் நையாண்டி கேலிச்சித்திரங்கள் தொடர்பாக கண்டித்துள்ளதுடன், "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு மதத்தையும் அவதூறு செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறியுள்ளது.

பிரெஞ்சு நிறுவனங்களுக்கு உதவுவதற்கும், பிரெஞ்சு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பிரசிற்கு எதிரான இதுபோன்ற போராட்டங்களுக்கு தொடர்பாக சம்மந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அந்தந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளை பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.

முன்னதாக, பிரான்ஸ் அதிபரின் இஸ்லாம் குறித்த வெறுப்புணர்வுக்கு மனநல சிகிச்சை தேவை என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தங்கள் தூதரை பிரான்ஸ் திரும்ப அழைத்துக்கொண்டது. பிரான்ஸ் துருக்கி இடையே உரசல்கள் உருவான நிலையில் அரபு நாடுகளும் பிரான்சுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளது. ஆனால் எந்த ஒரு நாடும் பரிதாபமாக கொல்லப்பட்டார் ஆசிரியர் குறித்து கவலை படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate