விளையாட்டு

வெயிட்டு போட்ட கிரிக்கெட் வீரர் அதனால் ஏற்பட்ட விபரீதம்?

அதிக எடையுடன் உள்ளார் என்று பிட்னெஸ் டிரைனர் தெரிவித்துள்ளதால் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் மற்றும விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

 ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கேஎல் ராகுலும், டெஸ்ட் போட்டியில் விருத்திமான் சகாவும் இவருக்கு போட்டியாக உள்ளனர். ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. தற்போதில் இருந்தே அதற்கு தயாராகி வருகிறது. 

முதற்கட்டமாக வீரர்கள் உடற்தகுதியுடன் உள்ளார்களா? என பிட்னெஸ் டிரைனர் பரிசோதித்து வருகிறார்.
அந்த வகையில் ரிஷப் பண்ட்-ஐ பார்த்த டிரைனர் மிரண்டு போனார். ஏன்னெறால் ரிஷப் பண்ட்  அதிக எடையுடன் காணப்பட்டுள்ளார். 

இதனால் ஆஸ்திரேலியா தொடரின்போது தேர்வு ஆவது சந்தேகம் எனத் தெரிகிறது. டிரைனர் தேர்வுக்குழுவிடம் ரிஷப் பண்ட் எடைகுறித்து தகவல் தெரிவிப்பார். ஒருவேளை எடையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் சிக்கல்தான்.

ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடித்தாலும் கூடு கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்புள்ளது. டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டுக்கும் சகாவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate