உலகம்

பாகிஸ்தானில் இந்த சேவையா: பொது மக்கள் மகிழ்ச்சி

பாகிஸ்தானில் முதல் மெட்ரோ ரெயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.இந்த செய்தி பாகிஸ்தான் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

லாகூர்:

போக்குவரத்து கட்டமைப்புகள் மிகவும் குறைவான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அந்நாட்டில் சாலை வழி போக்குவரத்தே பிரதானமான போக்குவரத்து சேவையாக உள்ளது. 

இதற்கிடையில், பாகிஸ்தானில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க அந்நாடு திட்டமிட்டது. இதற்காக சீனாவிடம் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் கடன் தொகை பெறப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில் 27 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வந்தது.

அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த ரெயில் பாதை அமைப்பதில் ஓராண்டு கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டதையடுத்து, ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த பணிகளை சீனாவின் அரசு நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில் இன்று மெட்ரோ ரெயில் சேவை முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இது தான் பாகிஸ்தானின் முதல் மெட்ரோ ரெயில் சேவை ஆகும்.

முதல் முறையாக இன்று தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவையில் பாகிஸ்தான் மக்கள் ஆர்வமுடன் பயணம் செய்வது மட்டுமின்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate