உலகம்

நேரலையின்போது நிருபரின் செல்போனை கொள்ளை அடித்த பலே திருடன்- வைரல் வீடியோ!!

அர்ஜென்டினா நாட்டில் செய்தி நேரலையின்போது நிருபரின் செல்போனை கொள்ளையடித்து ஓடிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.

பியூனஸ் அயர்ஸ்:-

அர்ஜென்டினாவில் என் விவோ எல் நியூவ் என்ற செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் டியாகோ டெமார்கோ என்ற தொலைக்காட்சி நிருபர், தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து நேரலையில் பேச தயாராகி கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனை திருடிக்கொண்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம்  கேமராவில் நேரலையில் சிக்கியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 20 ஆம் தேதி காலை 8:49 மணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்ஸின் தென்கிழக்கு பகுதியான  ரியோ டி லா பிளாட்டாவின் கரையோரத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ள இடத்தில் அமைத்துள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நடந்துள்ளது. 

COURTESY


அந்த வீடியோவில், நிருபர் ஸ்பானிஷ் மொழியில் கூச்சலிடுகிறார், “ஹே அதை என்னிடம் கொடுத்துவிடு. எனது செல்போனை திருடிவிட்டான். அவனை பிடியுங்கள், நான் ஏன் செல்போனுடன் தான் வேலை செய்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். ” என்று கத்திகொண்டே அவர் திருடனின் பின்னால் ஓடிக்கொண்டே வழிப்போக்கர்களிடம் உதவி கேட்கிறார்.

இதனிடையே, அதிர்ஷ்டவசமாக, உள்ளூர்வாசிகள் செல்போனை திருடிய நபரை பிடித்து அவனிடமிருந்து செல்போனை மீட்டு நிருபர்  டெமார்கோவிடம் திருப்பி அளித்துள்ளனர். செல்போன் மீட்டெடுக்கப்பட்ட பின்னர், டெமார்கோ மிகவும் நிம்மதியடைந்தார் அங்கிருந்தவர்களுக்கு தனது நன்றி தெரிவித்தார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate