இந்தியா

இந்தியாவியே முதல்முறையாக நேரலையில் வழக்கு விசாரணையை ஒளிபரப்பிய குஜராத் உயர்நீதிமன்றம்

இந்தியாவியே முதல்முறையாக குஜராத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை காணொலி மூலம் நேரலையில் யூடியூபில் ஒளிபரப்பு செய்துள்ளது.

காந்திநகர்:-

குஜராத் உயர்நீதிமன்றம் இன்று புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. இந்தியாவியே முதல்முறையாக நேரலையில் வழக்கு விசாரணையை யூடியூபில் நேரடி லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளது. 

இது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தேவையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கும் சிறந்த புரிதலை உருவாக்குவதற்கும் ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது.

கொரோனா அச்சறுத்தல் காரணமாக பல்வேறு சேவைகள் முடங்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா அச்சுறுத்தலால் தற்போது பல்வேறு நிறுவனங்களின் முக்கியக் கூட்டங்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் என முழுவதும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன.

அதேபோன்று, தற்போது பல மாநிலங்களில் பாதிப்பு குறைந்தாலும் கொ ரோனா அச்சம் காரணமாக நீதிமன்றங்களில் பெரும்பாலும் காணொலி  காட்சி மூலமாகவே விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, இதன் அடுத்தகட்டமாக குஜராத்தில் முதல்முறையாக நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக வழக்கு நேரலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பல்வேறு வழக்குகளை ஜூம் செயலி மூலமாக விசாரித்து வருகிறது.

செப்டம்பர் 2018 இல் (அப்போதைய) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய் சந்திரசூட் அடங்கிய பெஞ்ச், வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஒழுங்குமுறை விதிகளை வகுக்க உத்தரவிட்டது.

அவ்வாறு செய்யும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் அதன் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஸ்வப்னில் திரிபாதி எதிர் உச்ச நீதிமன்ற வழக்கில் இந்த உத்தரவை நிறைவேற்றிய போது "சூரிய ஒளி சிறந்த கிருமிநாசினி" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

மேலும், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அரசியலமைப்பு பெஞ்ச் பரிந்துரை அடிப்படையில், நீதிமன்ற எண் 1 இல் ஒரு சோதனை முயற்சியாக  நேரடி ஒளிபரப்பை தொடங்க பரிந்துரைத்திருந்தார்.

கடந்த பிப்ரவரில்,நேரடி ஒளிபரப்பு தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்க கோரி மூத்த வழக்கறிஞர் எம்.எஸ். இந்திரா ஜெய்சிங் இந்திய அரசியலமைப்பின் 32 வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இது குறித்து ஆராய உச்சநீதிமன்றம் அதன் நிர்வாகத்திற்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate