தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை

உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார்(காவேரி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சருக்கு கொரோன தொற்று காரணமாக 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு எக்மோ உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

கடந்த அக்டோபர் 13ம் தேதி சேலத்தில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு செல்லும் வழியில் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் காரணமாக உடனடியாக திண்டிவனம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார்(காவேரி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சருக்கு கொரோன தொற்று காரணமாக 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு எக்மோ உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

அவ்வறிக்கையில், அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், COVID-19 நிமோனியா பாதிப்பில் உள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், முக்கிய உறுப்புகள் தொடர்ந்து செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் அடுத்த 24 மணி நேரம் கழித்தே அமைச்சரின் உடல்நிலை குறித்து தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியான நிலையில் தொடர்ந்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜு உடுமலை ராதாகிருஷ்ணன்,  கருப்பண்ணன்,   அமைச்சர் கே.சி.விர மணி  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு  ஆகியோர் துரைக்கண்ணு உடல் நலம் குறித்து விசாரிக்க தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate