இந்தியா

இந்தியா-அமெரிக்கா இடையிலான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது!!

இந்த ஆண்டுக்கான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களுக்கு ராணுவ முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அமெரிக்க மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையேயான இரண்டுக்கு இரண்டு (‘2 பிளஸ் 2’) பேச்சுவார்த்தை ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.

அவர்களுக்கு ராணுவ முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அமெரிக்க மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தகவல் பகிர்வு, ராணுவ தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.

மேலும் லடாக்கில் சீனாவுடனான எல்லை பதற்றம், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் போன்ற அம்சங்களும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாட்டிலைட் தரவுகளை பங்கிடுவது குறித்த ஒப்பந்தம், ராணுவ தளவாட ஒப்பந்தம் உள்ளிட்டவை இந்த சந்திப்பில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினைக்கு மத்தியிலும், வர்த்தகம், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா, சீனா இடையிலான மோதலுக்கு மத்தியிலும் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதால் இது மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate