தமிழ்நாடு

சென்னையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

சென்னையில் நேற்று 5 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இடிபாடுகளில் சிக்கி 2 இருசக்கர வாகனம், ஒரு சரக்கு வாகனம் கடுமையாக சேதமடைந்தன

சென்னை ராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நியூ காலேஜ் எதிரில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இயங்கி வருகிறது. 1977ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் தரைதளத்தை  முகமது சரீப் என்பவர் 5 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளார். குத்தகை காலம் முடிந்தும் தொடர்ந்து காலி செய்யாத அவர், மேற்கொண்டு ஒரு தளத்தை கட்டி அதனை வாடகைக்கும் விட்டுள்ளார். 

இந்நிலையில் இந்த குடியிருப்பு கட்டிடத்தை ஓராண்டுக்கு முன்பு விலைக்கு வாங்கிய இம்ரான் என்பவர் 5 மாடி கட்டிடத்தில் இருந்த 13 குடியிருப்பு வாசிகளை வெளியேற்றியுள்ளார். மீதமுள்ள ராஜியா பேகம் என்பவர் மட்டும் வீட்டை சொந்தம் கொண்டாடி குடும்பத்தினருடன் தொடர்ந்து இந்த கட்டிடத்தில் வசித்து வருகின்றார். 

கட்டிடத்தை காலி செய்ய அதிக பணம் கேட்பதால் ரஜியா பேகத்திற்கு எதிராக கட்டிட உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ரஸியா பேகத்தை கட்டிடத்தில் இருந்து வெளியேற்ற தற்காலிகமாக நீதிமன்றம் தடை விதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை7.30 மணி அளவில் கட்டிடத்தின் கிரில் கதவு மட்டும் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த ரசியா பேகம் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டை உடனடியாக காலி செய்து வெளியேறினார்

இரவு 8.30 மணி அளவில் 5 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இடிபாடுகளில் சிக்கி 2 இருசக்கர வாகனம், ஒரு சரக்கு வாகனம் கடுமையாக சேதமடைந்தன

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்தர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார்

கல்லூரி விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது கட்டிட இடிபாடுகள் சாலையில் கொட்டி கிடப்பதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate