இந்தியா

அதிகரித்து வரும் காற்று மாசு - டெல்லி மக்கள் அவதி

ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற காற்று தர சுட்டெண் 377 ஆக இருந்தது. நேற்று முன்தினம் இது 343 - ஆக இருந்தது. (காற்று தர சுட்டெண் 251-350 வரையில் இருக்கிறபோது காற்றின் தரம் மோசம் என்று அர்த்தம்). காற்று தர சுட்டெண் 50 என்ற அளவில் இருந்தால்தான் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மிக மோசமாக காணப்படுகிறது

வாகனங்கள் வெளியிடுகிற புகை, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கிறபோது ஏற்படுகிற புகை டெல்லிக்கு காற்றில் கடும் மாசு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.

‘ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற காற்று தர சுட்டெண் 377 ஆக இருந்தது. நேற்று முன்தினம் இது 343 -  ஆக இருந்தது. (காற்று தர சுட்டெண் 251-350 வரையில் இருக்கிறபோது காற்றின் தரம் மோசம் என்று அர்த்தம்). காற்று தர சுட்டெண் 50 என்ற அளவில் இருந்தால்தான் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்று காலை டெல்லியின் ஆனந்த்விஹார் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 405 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காற்றின் தரம் மோசமாகவே இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது 

டெல்லி அரசு காற்றில் மாசுவின் அளவை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங் களை ‘ஆப்’ செய்யுமாறு மாநில அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஆனாலும் காற்று மாசு குறைந்ததாக தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate