உலகம்

கடுமையான கட்டுபாடுகளை கடைபிடித்தால் கொரோனா பரவல் குறையும் - ஆராய்ச்சியில் தகவல்

கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஜூலை 20-ந் தேதி வரை 131 நாடுகளில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும், அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து,இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மாதிரி ஆய்வு ஒன்றை நடத்தி ஆய்வின் முடிவுகளை ஒரு பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது:-

கொரோனா பரவலை குறைக்க தனிப்பட்ட நடவடிக்கைகளாக பள்ளிகள், பணியிடங்களை மூடுதல், பொது நிகழ்ச்சிகளை தடை செய்தல், 10 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால், 28 நாட்களில் கொரோனா பரவல் விகிதம் 24 சதவீதம் குறையும்.

சில நாடுகளில் கொரோனா 2-வது அலை பரவல் நடப்பதை பார்த்துள்ளோம். அதை தவிர்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டும். இதற்கு நல்ல பலன்கள் ஏற்படுவதை பார்த்துள்ளோம்.

பள்ளிகளை திறந்ததால், சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்ததை கவனித்துள்ளோம். எனவே, பள்ளிகளை திறக்கும்போது, கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate