சிறப்புச் செய்திகள்

வங்கிகளில் உள்ள பிக்செட் டெபாசிட் (வைப்பு நிதி)யை ஐ பாதுகாக்க எளிய வழிமுறைகள்

வங்கிகளில் உள்ள உங்களது பிக்செட் டெபாசிட் (வைப்பு நிதி)யை ஐ பாதுகாக்க எளிய வழிமுறைகள்

வங்கிகளில் உள்ள உங்களது பிக்செட் டெபாசிட் (வைப்பு நிதி)யை  ஐ பாதுகாக்க எளிய வழிமுறைகள் 

1. ஆட்டோ ரேனியுவ் செய்ய விட  வேண்டாம். அதாவது உங்களது தொகை வட்டியுடன் கூட முதிர்ந்துவிடும் போது அதனை நீங்கள் அறியாதிருக்கும் பட்சத்தில் வங்கிகளால் உங்களது அசல்,மற்றும் வட்டி  முதிர்வுத் தொகை மீண்டும் அவர்களது வங்கியில் உங்களது வைப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு அப்போது நீங்கள் பெரும் வட்டியை விட குறைந்த வட்டி விகிதம் உங்களுக்கு கிடைக்கப்பெறலாம்  

2. உங்களது ஸேவிங்ஸ் அக்கௌண்டில் இருந்து ஆட்டோ டெபிட் செய்ய விட வேண்டாம்

3. உரிய தேதிகளுக்குள் வங்கிகளுக்குச்  சென்று உங்களது வட்டிப்பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

4.  பிக்செட் டெபாசிட் செர்டிபிகேட்டுகளை பழுதாகாமல் அதனை கறை படியாமல்  பாதுகாத்து வைத்து 
     க்கொள்ளுங்கள் 

5. பிக்செட் டெபாசிட்  செர்டிபிகேட்டுகளை கலர் நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் 

6. எக்காரணம் கொண்டும் எந்த புதிய சான்றிதழ்களில் அதாவது இன் கம் டாக்ஸ் சலுகை சான்றிதழ்களில் 
    கையெப்பம் இடும் முன் ஒரு முறைக்கு பலமுறை அதனை வாசித்த பின் செய்யவும் 

7. கூடுமானவரையில் உங்களது முதலீட்டின் முதிர்வு தொகையின் வருடங்களை குறைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீண்ட கால பிக்செட் டெபாசிட் (வைப்பு நிதி) முதலீடுகளாக இருக்கும்பட்சத்தில் அதற்குரிய வட்டித்தொகையை மாத மாதம் உங்களது சேவிங்ஸ் (சேமிப்பு) கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் இதனால் உங்களது முதலீட்டிற்கு வேண்டிய வட்டி உங்களது சேவிங்ஸ் (சேமிப்பு) கணக்கில் வந்து சேரும் 

8. நல்ல வட்டி தரும் வங்கிகளை மாத்திரம் தேர்வு செய்யுங்கள் 

9. கூடுமானவரையில் முகம் தெரியாத அறிமுகமற்ற  சிட்  பண்டுகளில் அல்லது தனிப்பட்ட நபர் நடத்தும் 
   சிட்பண்ட்களில்   முதலீடுகள் செய்யாதீர்கள் 

10. அதிக வட்டி தருகின்றோம் என்று கூறும் நிறுவனங்களை ஒருபோதும் நம்ப வேண்டாம்.

11. உங்களது பிக்சட் டெபாசிட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் 

12. நீங்கள் பிக்சட் டெபாசிட்  செய்யும் போது நீங்கள் ஒரு வேளை அங்கு இல்லாவிட்டாலோ  அல்லது தீடிரென இறந்துவிட்டாலோ   உங்களுக்கு பதில் யார் உங்களுடைய முதலீட்டையும் வட்டியையும் பெறத்  தகுதியானவர் என்று நீங்கள் தீர்மானிக்கும் ஒரு சரியான  உங்களது குடும்ப நபரை உங்களது முதலீட்டு வாரிசுத்தாரராக  பரிந்துரைக்கும் படிவத்தில் கையெப்பமிட்டு அவர்களது விவரங்களை அதில் பதிவிடுங்கள் 

13. கவர்ச்சிகரமான நிதி நிறுவன விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம்..ஓவ்வொரு முறையும் உங்களது முதலீட்டின் போது  அந்த நிறுவனத்தின் பின்புல வரலாறு மற்றும் அது எவ்வளவு காலம் பழமை வாய்ந்தது என்பது போன்ற தகவல்களுடன் அது எவ்வளவு வாடிக்கையாளர்களை கொண்டு சேவை செய்து வருகின்றது மற்றும் நிதி நிறுவனத்துறையில் அதன் தரம் மதிப்பு பங்களிப்பு போன்றவற்றையும் நீங்கள் நன்கு ஆய்வு செய்து அதன் பின்னர் உங்களது முதலீட்டை செய்யவும்.

14.கூடுமான வரையில் தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் நீங்கள் வைத்திருக்கும் பிக்செட் டெபாசிட் (வைப்பு நிதி) க்கு எதிராக உங்களது அவசரத் தேவைக்கு கடன் (லோன் ) வாங்குவதை தவிர்க்கவும். அப்படி நீங்கள் வாங்கும்பட்சத்தில் உங்களதுபிக்செட் டெபாசிட் (வைப்பு நிதி)க் 
கேற்ற வருவாய் வட்டி விகிதம் குறைந்து போக வாய்ப்புகள் ஏற்படலாம்.

15. நீங்கள் உங்களது பிக்செட் டெபாசிட் (வைப்பு நிதி) முதலீடுகளை குறைந்த கால அளவில் நிறைந்த வட்டி தரும் வாங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் உங்களது பிக்செட் டெபாசிட் (வைப்பு நிதி) முதலீடுகளை செய்வது லாபம் தரும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate