Just In

"செய்யும் தொழிலே தெய்வம்"....இணையத்தில் வைரலாகும் தூய்மைத் தொழிலாளியின் 'ஆயுதபூஜை' புகைப்படங்கள்!!

ஏழ்மையான தூய்மை தொழிலாளி ஒருவர் தான் வருடம் முழுதும் கையில் பிடித்து சமூகத்தின் குப்பைகளை அள்ள பயன்படுத்தும் தனது தொழில் உபகாரணங்களான குப்பைத்தொட்டி, துடைப்பம் போன்ற பொருட்களை சுத்தம் செய்து பூ, பொட்டு வைத்து பய-பக்தியுடன் வணங்கும் புகைப்படங்கள் இணைய வாசிகளை மனம் நெகிழ வைத்துள்ளது.

ஆயுதபூஜை உழைக்கும் ஏழை எளியோரின் திருவிழா என்று தான் சொல்ல வேண்டும். என்ன தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல, அந்த தொழிலை எப்படி செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்ற கூற்று உண்டு. பொதுவாக நம் நாட்டில் செய்யும் தொழிலை  மக்கள் அனைவரும் தெய்வமாகவே கருதுகின்றனர். வருடமெல்லாம் அயராதுழைத்து நமக்கு வருமானத்தை ஈட்டி தரும் இயந்திரங்கள், வாகனங்கள், வேலை உபகரணங்கள் என செய்யும் தொழிலுக்கு பக்கபலமாய் இருந்து உதவும் பொருட்களை தெய்வத்திற்கு நிகராக வைத்து வணங்கி அவற்றிற்கு நாம் மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் தினம் தான் இந்த 'ஆயுதபூஜை' விழா.

இந்த நாளில் ஏழை முதல் பணக்காரர்கள் வரையிலும் அவரவர் தங்கள் இல்லங்களிலும், வியாபார இடங்களிலும் பிரம்மாண்டமாக படையலிட்டு பூஜை செய்து மற்றவர்களுக்கு அவற்றை வழங்கி மகிழ்வர். வசதி படைத்தவர்கள்  மற்றவர்களுக்கு மனம் உவந்து இனிப்பு மற்றும் பொரி கடலைகளை அளித்தும், வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் ஏழைகள் எளிமையான முறையில் தங்கள் தொழில் பக்தியை வெளிப்படுத்தியும் வருகின்றனர். இந்த ஆயுதபூஜை நன்னாளில் தொழிற்சாலை இயந்திரங்கள், ஆட்டோ, லாரி என பலவற்றிற்கு பூஜை செய்து மரியாதை செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஏழ்மையான தூய்மை தொழிலாளி ஒருவர் தான் வருடம் முழுதும் கையில் பிடித்து சமூகத்தின் குப்பைகளை அள்ள பயன்படுத்தும் தனது தொழில் உபகாரணங்களான குப்பைத்தொட்டி, துடைப்பம் போன்ற பொருட்களை சுத்தம் செய்து பூ, பொட்டு வைத்து பய-பக்தியுடன் வணங்கும் புகைப்படங்கள் இணைய வாசிகளை மனம் நெகிழ வைத்துள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate