லைப் ஸ்டைல்

கொரோனா தொற்றால் தாமதமான பரிசோதனை, மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பு அபாயம்!

கொரோனா நோய் தொற்று அபாயம் கிராமப்புறங்களை விட நகரங்களையே அதிகம் தாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில் பெண்களின் ஆரோக்கிய நலன் பெரிதாக கண்டுகொள்ளப்படாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. பெண்கள் 20 வயதைக் கடந்தாலே வருடத்திற்கு ஒரு முறையேனும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது மருத்துவர்கள் முன்பிருந்தே அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனா காலத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

கொரோனா நெருக்கடி என்பது ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் பெரும் அச்சத்தை உண்டாக்குகிறது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் உடல் நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்து குறைவாக இருப்பதால் கொரோனா வைரஸிற்கு தொற்றிக்கொள்ள ஏதுவாக உள்ளது. எனவேதான் அவர்களை அதிக கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அந்த வகையில் பெண்களை அதிகம் தாக்கும் மார்பகப் புற்றுநோய் இந்த கொரோனா நெருக்கடியில் கண்டுக்கொள்ளப்படாத தலைப்பாக மாறிவிட்டதோ என மருத்துவர்கள் அச்சப்படுகின்றனர். 2020 ஆண்டிற்கான ICMR வெளியிட்டுள்ள தேசிய புற்றுநோய் பதிவுத்திட்ட அறிக்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளது.

அதுவும் நகரங்களில் வாழும் பெண்கள்தான் அதிகம் என எச்சரிக்கிறது. அதேசமயம் கொரோனாவும் நகரங்களையே அதிகம் தாக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வேளையில் பெண்களின் ஆரோக்கிய நலம் மிக மிக அவசியம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் பெண்களை சந்தித்து பேசிய போது அவர்கள் இந்த நெருக்கடியில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வதை தள்ளிப்போட்டுள்ளனர். கொரோனா நெருக்கடி முடிந்ததும் பரிசோதனை செய்துகொள்ளலாம் என காத்துக்கொண்டிருந்ததாகக் கூறியுள்ளனர்.

மார்பகப் புற்றுநோயை தடுப்பதற்கான ஒரே வழி அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நீக்குவதுதான். அதற்கு பரிசோதனைதான் முதன்மை வழி என்றிருக்கும் நிலையில் அதையே தள்ளிப்போட்டதன் விளைவுதான் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்திருக்கக் காரணம் என கூறியுள்ளனர்.
ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை மூலம் கண்டறிந்துவிட்டால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் தீவிரத்தை கட்டுப்படுத்தி குணமாக்கிவிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஒருவேளை அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்து, கொரோனா தொற்று இருந்தால் காப்பாற்றுவது சிரமம்தான் என்கின்றனர். எனவே எச்சரிக்கையுடன் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சரி செய்வது நல்லது என்கின்றனர். எனவே பெண்கள் 20 வயதைக் கடந்தாலே வருடத்திற்கு ஒரு முறையேனும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate