அரசியல்

தமிழகத்தில் ட்ரெண்டாகி வரும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் விழா!!!

இலங்கை அரசியல் பிரமுகர்களில் முக்கியமானவராக விளங்கும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, சேலம், நாமக்கல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி:-

தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை உலகளவில் கொண்டு போய் சேர்த்தவர்களில் முக்கியமானவர் செந்தில் தொண்டமான்.

இவர் இலங்கையில் வசித்தாலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நலச் சங்கத்தின் கௌரவத் தலைவராக உள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காகவே பிரத்தியேகமாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்த பிரச்சனை வந்தாலும் அதற்காக குரல் கொடுத்து தமிழகத்தின் பல கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இவர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் பல்வேறு கிராமங்களில் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வாங்கி தந்ததில் முக்கியமானவர் செந்தில் தொண்டமான்.

அதேபோல, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காயப்பட்டால் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள்  வழங்குவதோடு, அவர்களின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவிகளையும் விளம்பரமின்றி வழங்கிவருகிறார்.

தமிழகத்தில் M.புதூர் என்ற இடத்தில் சிறந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியவர் செந்தில் தொண்டமான். இந்தப் போட்டி  உலக சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உலகளவில் மிகச் சிறந்த அங்கீகாரம் கிடைத்தது. மத்திய அரசு M.புதூர் ஜல்லிக்கட்டு நிகழ்வு தொடர்பாக தபால் தலையை வெளியிட்டு செந்தில் தொண்டமானை கவுரவித்தது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக உலக அளவில் முதன்முதலாக தபால் தலை வெளியிட்ட நிகழ்வை நடத்திய பெருமை செந்தில் தொண்டமானை சாரும்.

ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து செய்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க சட்டம் கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து தன்னுடைய உதவிகளை தவறாமல் செய்தவர் செந்தில் தொண்டமான்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நீதிமன்றங்களில் சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்றத்தில் வாதாடி அதற்கான உரிய ஆணைகளை பெற்று தந்து பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க ஏற்பாடு செய்தவர் செந்தில் தொண்டமான்.

  
அதோடு, தமிழ்நாடு வீர விளையாட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநில செயலர் ஒண்டிராஜ், இளைஞர் அணி தலைவர் ராஜேஷ், தேசிய ஒருங்கிணைப்பாளர சூரியூர் ராஜா, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க நிறுவனர் மறைந்த அம்பலத்தரசு ஆகியோரும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். இவர்களின் அனைத்து போராட்ட களங்களில் உடன் நின்று போராடியவர் செந்தில் தொண்டமான் தான்.

ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து ஆதரவாக குரல் எழுப்பி வரும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்தின் பல கிராமங்களில் இளைஞர்களால் கட் அவுட் வைத்து கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொதுவாக இளைஞர்கள் தங்களுடைய அபிமான ஹீரோக்களுக்கு மட்டுமே கட்-அவுட் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி வரும் சூழலில், தமிழகத்தில் இல்லை என்றாலும் கடல் கடந்து வசிக்கும் ஒரு தமிழரின் பிறந்த நாளை தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்கள் ஒன்று கூடி கட் அவுட் வைத்துக் கொண்டாடியது நிச்சயம் சுவாரசியமான விஷயம்தான்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate