லைப் ஸ்டைல்

தீபாவளி வேற வருது, உங்க டயட் என்ன ஆகுறது?

பண்டிகை காலகட்டத்தில் உடல் எடையைக் குறைக்க டயட் திட்டம் வைத்திருப்போர் இனிப்பு, காரம் , பல வகையான உணவு என பார்த்ததும் அதற்கு விடுமுறை அளித்துவிடுவார்கள். இப்படி செய்தால் உங்கள் உடல் குறைப்பு இலக்கு என்ன ஆவது..? எனவே உங்களை கட்டுப்படுத்த சில வழிகளை இங்கு பாப்போம்..!

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவலால் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறது. மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு இன்னும் முழுவதுமாக தூக்கப்படாத நிலையில் தீபாவளி காலமும் வந்துவிட்டது. மற்ற நாட்களை விட பண்டிகை நாட்களில் இனிப்பு கார வகைகளை அதிகமாக உட்கொள்ளுவது இயல்பு தான்.

ஆனால், இதனால் அதிகம் பாதிப்படைபவர்கள் டயட் இருப்பவர்கள் தான். இந்த பண்டிகை காலகட்டத்தில் உடல் எடையைக் குறைக்க டயட் திட்டம் வைத்திருப்போர் இனிப்பு, காரம் , பல வகையான உணவு என பார்த்ததும் அதற்கு விடுமுறை அளித்துவிடுவார்கள். இப்படி செய்தால் உங்கள் உடல் குறைப்பு இலக்கு என்ன ஆவது..? எனவே உங்களை கட்டுப்படுத்த சில வழிகளை இங்கு பாப்போம்..!

குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகள், பால் பலகாரங்களை சாப்பிடலாம். அதேபோல் இனிப்பு குறைவாக இருக்கும் ஸ்வீட் வகைகளை சாப்பிடுங்கள். அதிக இனிப்பை தவிர்க்கலாம். அதற்காக அவற்றை அதிகமும் சாப்பிட்டு விடாதீர்கள். அவை குறைந்த கொழுப்பு, குறைந்த இனிப்பு சுவைதானே தவிர, கொழுப்பும், இனிப்பும் முற்றிலும் இல்லாத உணவு, பலகாரங்கள் அல்ல.

எண்ணெய்யில் சுட்ட பலகாரங்கள் பண்டிகை நாட்களில் தவிர்க்க முடியாதது. அவற்றை பார்த்தால் உங்களுக்கும் சாப்பிடாமல் இருக்க முடியாது. எனவே எண்ணெய் குறைவாக இருக்கும் பலகாரங்களை சாப்பிடலாம். இல்லை எனில் வழக்கமாக எவ்வளவு சாப்பிடுவீர்களோ அதற்கும் குறைவாக சாப்பிடுங்கள்.

பண்டிகை கொண்டாட்டத்தில் தண்ணீர் குடிக்க மறந்துவிடாதீர்கள். போதுமான நீர் அருந்துங்கள். இதில் ஒரு டிப்ஸும் உள்ளது, அதிகமாக தண்ணீர் குடிப்பதால் குறைந்த உணவே சாப்பிட முடியும். வயிறு நிறைவாக இருக்கும்.

மற்ற நாட்களை விட இந்த நாட்களில்தான் உடல் குறைப்பு விஷயத்தில் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். உணவில் சமரசம் செய்து கொண்டால் இத்தனை நாள் செய்த உழைப்பிற்கு பலன் இருக்காது. பின் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஸ்வீட், பலகாரங்களுக்கு பதில் பழங்கள், நட்ஸ் வகைகள் சாப்பிடுங்கள். இவற்றை சாப்பிட்டுவிட்டு நன்கு தண்ணீர் குடித்தாலே வயிறு நிறைவாக இருக்கும். மற்ற உணவுகளை சாப்பிட மாட்டீர்கள். சிறிய அளவிலான தட்டு, ஸ்பூன் கிளாஸ், பவுக் என பயன்படுத்துங்கள். இதனால் அதிக உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவு எனில் நிறைய சாப்பிடுங்கள்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate