கல்வி & வேலைவாய்ப்ப

தேர்வு எழுத முடியாமல் போன இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியீடு…!!

தேர்வை எழுதமுடியாமல் போன பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு மறுதேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தேர்வை எழுதமுடியாமல் போன பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு மறுதேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வை சமீபத்தில் ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை நடத்தியது.

இந்த ஆன்லைன் தேர்வை 93 சதவீதம் மாணவர்கள் எழுதினார்கள். இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு தேர்வு குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

அதன்படி, வருகிற 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை மறுதேர்வு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாடவாரியான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சென்று அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒரு மணி நேரம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate