Trending News

#BoycottAmazon என்ற பெயரில் டிவிட்டரில் வைரல் ஏன் தெரியுமா?

அமேசான் நிறுவனம் தற்போது #பாய்க்காட் என்ற பெயரில் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை பார்க்கலாம்.

அமேசான் நிறுவனம் தொடங்கி இந்த ஆண்டோடு 26 ஆண்டுகள் ஆகின்றன. உலகத்தின் மதிப்புமிக்க நிறுவனங்களில் இப்போது அதுவும் ஒன்று. உலக பணக்காரர்களின் அதன் நிறுவனர் ஜெஃபும் ஒருவர். அமேசானின் ஆண்டு வருமானமும் அனைவரையும் மலைக்க வைக்கிறது.

பல தரப்பட்ட விஷயங்களை அமேசானிற்குள் கொண்டுவந்ததுதான், அதன் வெற்றிக்கு காரணம் என்று கருதப்படுகிறது. அதாவது வீடியோ ஸ்ட்ரீமிங், ப்ரைம் ஆடியோ, அண்மையில் கொண்டுவரப்பட்ட காய்கறி விற்பனை என இந்த நிறுவனம் பல துறைகளில் கால்பதித்து வெற்றி கண்டிருக்கிறது. இணைய விற்பனையில் உச்சியை தொட்ட இந்த நிறுவனம், நேரடி விற்பனைக்காக கடைகளையும் திறக்க திட்டமிட்டுள்ளது.  ஒரு பக்கம் புகழின் உச்சாணி கொம்பில் இருக்கும் அந்த நிறுவனம் தற்போது ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. 

அமேசான் நிறுவனம் தற்போது #BoycottAmazon என்ற பெயரில் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை பார்க்கலாம். 

அமேசான் நிறுவனத்தின் வெப்சைட்டில் இந்துக்களின் மந்திரமாக கருதப்படும் "ஓம்"  பதித்த கால் மிதியும், இந்து தெய்வங்களின்  புகைப்படங்கள் பதித்த ஆடைகளும், இந்து கடவுள்களை அவமதிப்பது போன்று இருப்பதாகவும் அதனால் #BoycottAmazon   டிவிட்டரில் வைரலாகி வருகிறது. இதற்கு பலதரப்பட்ட மக்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
06-May-2021
பெட்ரோல்
Rupee 92.7(லி) Diesel Rate
டீசல்
Rupee 86.09(லி) Diesel Rate
பி.எஸ்.இ
48898.68 48690.23
என்.எஸ்.இ
14636.20 14697.45
1 கிராம்
Rupee 4416 Gold Rate
8 கிராம்
Rupee 35328 Gold Rate
1 கிராம்
Rupee 74.01 Gold Rate
1 கிலோ
Rupee 74010 Gold Rate