Trending News

தீபாவளிக்கு வாத்தி டீசரில் coming ஆ?

மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் பரவியதை அடுத்து #MasterTeaser என்பது டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடிக்க, ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. இதனிடையே ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் படக்குழு அதை முற்றிலுமாக மறுத்தது.  இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே காட்டு தீயாய் பரவியதையடுத்து #MasterTeaser என்பது டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate